லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பல்வேறு வசூல் சாதனைகளை பெற்றிருந்தது.
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இது விஜய் நடிக்கும் 65-வது படமாகும். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ள நிலையில் கொராேனா பெருந்தொற்று காரணமாக அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்யின் 66-வது படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
மகேஸ் பாபு நடிப்பில் வெளியான மகர்ஷி (2019) படத்தின் மூலம் தேசிய விருது (சிறந்த பொழுதுபோக்கு படம்) பெற்ற வம்சி பைடிபள்ளி இந்த படத்தை இயக்கவுள்ளார். இது நடிகர் விஜயின் முதல் நேரடி தெலுங்கு படமாகும். பிரபாஸ் நடிப்பில் உருவான முன்னா (2007) மூலம் இயக்குனராக அறிமுகமான இவர். ஜனியர் என்.டி.ஆர் நடிப்பில் பிருந்தாவனம் (2010), ராம் சரண் நடிப்பில் யவடு (2014), கார்த்தி நடிப்பில் தோழா (2016) ஆகிய வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.
இது பற்றி தெலுங்கு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இத்தகவலை உறுதி செய்துள்ளார். கொரானா பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்குக்குப் பிறகு இது குறித்த செய்தி அதிகாரபூர்வமாக வெளியாகும் எனவும் மேலும் தளபதி 66 வம்சி இதுவரை இயக்கிய படங்களின் பட்ஜெட்டை விட அதிக பட்ஜெட்டில் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தளபதி விஜய் – வம்சி இணையும் இந்த படத்தை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். விஜய் 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பைவிங்குவல் திரைப்படமாக உருவாகவுள்ளது.
மாஸ்டர் படத்தின் வெற்றியினாலும் இதுவரை வம்சி இயக்கிய படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெறும் வெற்றி அடைந்துள்ளதாலும் விஜய் 66 படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேலும் தளபதி விஜயின் பிறந்தநாளான ஜீன் 22, செவ்வாய் கிழமை அன்று தளபதி 66 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.