செய்திகள்

புளியங்குடி நகர DSP சுவாமிநாதன் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சுவாமிநாதன் கொரோனா தொற்று காரணமாக கடந்த 20 நாட்களுக்கு முன்பு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த ஒரு வருடமாக அப்பகுதியில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த அவர். ஊரடங்கு காலத்தில் பல்வேறு விதமான கொரோனா தடுப்புப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வந்துள்ளார். மேலும் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் அவ்வப்போது நலத்திட்ட உதவிகளையும் வழங்கி அப்பகுதி மக்களிடமும் மற்றும் காவல் துறையினரிடமும் நன் மதிப்பை பெற்றுள்ளார். அவரது இழப்பு சககாவலர்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button