செய்திகள்

உணவு பொட்டலங்கள் வாங்க புற்றீசல் போல குவிந்த மக்கள். நகரத்தில் நோய் தொற்று ஏற்படும் அபாயம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நகரத்தில் கலைஞர் பிறந்தாநாளை முன்னிட்டு அப்பகுதி திமுக பிரமுகர்கள் இலவச உணவு பொட்டல்கள் வழங்க இருப்பதாக அறிவித்துதிருந்தனர். இந்நிலையில் இன்று அந்நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது அங்கு வந்த பொதுமக்கள் திமுக பிரமுகர்கள் வழங்கிய இலவச உணவு பொட்டலங்களை வாங்க புற்றீசல் போல கூட்டமாக குவிந்தனர். முன்டி அடித்து கொண்டு 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உணவு பொட்டலங்களை வாங்கி சென்றதால் அங்கு தனி மனித இடைவெளி இல்லாத சூழல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயத்தை திமுக கட்சி நிர்வாகிகளே ஏற்படுத்தியதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button