தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருமலாபுரத்தை சேர்ந்தவர் ராமர்பாண்டி. இவருக்கு மாடத்தி (முதல் மனைவி), நாச்சியர் என இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் மாடத்தி ராமர் பாண்டி தம்பதியினருக்கு பண்ணையார் (எ) அழகிய நம்பி என்ற மகனும் சௌந்தர்யா என்ற மகளும் உள்ளனர். இரண்டாவது மனைவி நாச்சியார் மற்றும் இவரது தம்பி அழகிய நம்பிக்கும் பண்ணையாருக்கும் சொத்து தகராறு காரணமாக பலவருடங்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது சம்பந்தமாக வழக்கும் நடந்து வருகிறது. இந்நிலையில் ராமர் பாண்டியன் அவரது சொத்தை இரண்டாம் மனைவி நாச்சியார்க்கு கொடுக்க போவதாக வந்த தகவலை அறிந்து பண்ணையார் (எ) அழகிய நம்பி ராமர் பாண்டியனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பண்ணையார்க்கும் நாச்சியாரின் சகோதரர் அழகிய நம்பிக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாச்சியாரின் சகோதரர் அழகிய நம்பி பண்ணையாரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த படுகாயமடைந்த பண்ணையார், ரத்தம் சொட்ட சொட்ட அவரது உறவினர்களுடன் சேர்ந்து நாச்சியாரின் சகோதரர் அழகிய நம்பியை முகத்தை மூடி கல்லால் பலமாக அடித்துள்ளார். இதனால் அழகிய நம்பி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்துள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். இதில் பண்ணையார் உயிருக்கு ஆபாத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நாச்சியாரின் சகோதரர் அழகிய நம்பி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சம்பவம் இடத்திற்கு விரைந்த சங்கரன்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி கிருஷ்ணராஜ் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பண்ணையாரை நாச்சியாரின் சகோதரர் அழகியநம்பி அரிவாளால் வெட்ட வந்த பொழுது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read Next
கோக்கு மாக்கு
4 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
4 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
4 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
4 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
1 day ago
சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்த மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் – தொடர் நடவக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
3 days ago
வேட்டைக்கு சென்ற 2 வெவ்வேறு கும்பல்களை சேர்ந்த 7 கைது – தலைக்கு 20 ஆயிரம் வீதம் அபராதம்
3 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
4 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
4 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
4 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
4 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
4 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
4 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
4 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
Related Articles
“Alguma Análise Da Odaie De Apostas Para Usuários Brasileiro
April 22, 2023
“стулочасы Зеркало 1xbet: актуальное Зеркало На день Бесплатн
January 11, 2023
Check Also
Close