செய்திகள்

சங்கரன்கோவிலில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனம் நிகழ்ச்சி. ஏராளமானோர் ஆரவத்துடன் பங்கேற்பு

ஜீன் 21 ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. யோகா மற்றும் ஆசனங்களை உலகிற்கு பாரதம் வழங்கிய கொடையாகவே உலக மக்கள் பார்க்கத் தொடங்கி உள்ளார்கள். அதனை ஆரோக்கியமான வாழ்விற்கு மக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர் இந்நிலையில். இன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பதஞ்சலி யோகா அறக்கட்டளையின் சார்பாக 50க்கும் மேற்பட்டோர் யோகாசனம் செய்தனர். முன்னதாக பதஞ்சலி மாமுனிவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு தீபாராதனை நடை பெற்றது. பதஞ்சலி யோகா அறக்கட்டளையின் பயிற்சியாளர் ஜெயராம், தனி வட்டாட்சியர் மைதீன் பட்டாணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பல்வேறு விதமான யோகாசனங்களை அனைவருடனும் சேர்ந்து செய்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button