செய்திகள்
Trending

சங்கரன்கோவிலில் 25 ஹெக்டரில் தொழிற்பூங்கா, 10 ஆண்டு காத்திருப்பில் பொதுமக்கள்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது குருக்கள்பட்டி. கடந்த 2011 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டமாக இருந்த போது இங்கு 25 ஹெக்டேர் பரப்பளவில் சிட்கோ தொழிற்பூங்கா நிறுவ இடம் தேர்வு செய்யபட்டு அங்கு பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஒரு தொழில் நிறுவனங்களும் தொடங்கபடாததால் அப்பகுதி பொதுமக்களும் இளைஞர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் சட்டபேரவை தேர்தலுக்கு முன்பாக ஆடு ஆராய்ச்சி நிறுவனம் தொடங்க இடம் தேர்வு செய்யபட்டு, அந்த பணியும் கிடப்பில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக 16வது சட்டப்பேரவை கூட்டத்தின் போது ஆளுநர் உறையில் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்கும் நோக்கில் திட்ட குழு அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது தென்காசி மாவட்டத்தில் உள்ள சிட்கோ தொழிற்பூங்காவில் தொழில் நிறுவனங்கள் தொடங்க புதிய அரசு முயற்சி செய்யுமா என அப்பகுதி பொதுமக்களும் இளைஞர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button