சங்கரன்கோவில் அருகே உள்ள ஆண்டார்குளத்தை சேர்ந்தவர் சேவியர். இவருக்கு செல்வம் மற்றும் சுப்புலட்சுமி என இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் இரண்டாவது மனைவி சுப்புலட்சுமி அப்பகுதியில் விவசாயத்தோடு, பன்றி பண்ணையும் நடத்தி வருகிறார். இதில் முதல் மனைவியின் மகன் ஆரோக்கிய ராஜ்க்கும் சுப்புலட்சுமிக்கும் கடந்த சில ஆண்டுகளாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுப்புலட்சுமி பன்றி பண்ணைக்கு தீவனங்கள் வாங்க டாட்டா ஏசி வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்து செல்லும் வழியில் நகரம் என்ற பகுதியில் ஓட்டுநர் தேநீர் அருந்த இறங்கிய போது அருகில் இருந்த சுப்புலட்சுமி டிரைவர் வரும் வரை காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஆரோக்கிய ராஜ் வாகனத்திற்குள் அமர்ந்திருந்த சுப்பலட்சுமியை வாகனத்தில் வைத்து கத்தியால் குத்தியும் வெட்டியும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சுப்புலட்சுமி டாடா ஏஸ் வாகனத்தில் வைத்தே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அதே வாகனத்தில் சுப்புலட்சுமியின் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சங்கரன்கோவில் தாலுகா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஆரோக்கிய ராஜை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Read Next
June 8, 2024
பாபநாசம் வனத்துறை செக்போஸ்டில் போலீசாரை கன்னத்தில் பளார் என அறைந்த வனத்துறை அதிகாரி….
June 7, 2024
திருச்சி விமான நிலையத்தில் ரூ 43 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கம் பறிமுதல், ஒருவர் கைது
June 7, 2024
கலவர பூமியான பத்திர பதிவு அலுவலகம் -ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக வாக்குவதம் , கைகலப்பு
June 6, 2024
கஞ்சா கடத்தி வந்த லாரியுடன் கடத்தி வந்த நபர்களும் கைது
June 6, 2024
சுற்றுலா பயணிகளை கவர புதிய யுக்தியை கையாண்ட விடுதி மேலாளர் உட்பட 4 பேர் கைது
June 5, 2024
நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களை அமிலம் ஊற்றி பட்டு போக செய்தது யார்?
June 3, 2024
யானை தந்தங்கள் , யானை பற்கள் பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது – மேலும் சிலரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்
June 3, 2024
திண்டுக்கல்லில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மாடுகளின் ஓட்டப்பந்தயம்
June 3, 2024
பழனி அருகே அரசு பேருந்து முன் சக்கர கழன்று சாக்கடையில் விழுந்த்து
June 3, 2024
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் முன்பு தீவிர வாகன சோதனை, 75 பேருக்கு அபராதம்
Related Articles
விடுதியில் இளம்பெண் கொலை மர்ம நபர்கள் யார் போலீசார் விசாரணை!
December 25, 2021
குற்றாலத்தில் பயங்கரம் துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை!
August 13, 2022
வழிப்பறி திருடனை காட்டி கொடுத்த ஷூ
May 25, 2024
Check Also
Close