க்ரைம்
Trending

ஏரி கரையில் எலும்பு கூடுகள் நடந்தது என்ன..? பின்னணி தகவல்கள்!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாட்டத்தூர் கிராமத்தில் கழிவு நீர் ஓடை அருகே குப்பைகள் எரிக்கப்பட்ட இடத்தில் மனித எழும்பு கூடுகள் மக்கிய நிலையில் கிடந்துள்ளது. இதை அவ்வழியாக சென்ற நபர்கள் எரிந்த நிலையில் எழும்பு கூடு கிடப்பதாக தெரிவிக்கவே, அக்கம்பக்கத்தினர் கூறிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற் கொண்டனர். அப்போது அங்கே மனித எழும்பு துண்டுகள் பல ஆண்டுகள் ஆகி மக்கிய நிலையில் கிடந்துள்ளது. மேலும் யாரேனும் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும் போது கிடைத்தவைகளை வீசி சென்றிருக்க கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் எரிந்த நிலையில் சடலங்கள் கிடப்பதாகவும் அது ஒரு காதல் ஜோடி எனவும் ஆணவ கொலை செய்யப்பட்டதாகவும் யாரோ வதந்தியை கிளப்பி விட அந்த போலி செய்தி காட்டுதீ போல பரவியது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு என்னவென்றே தெரியாமல் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்தனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் காவல்துறையினர் அங்கு கூடிய பொது மக்களை அப்புறப்படுத்தினர். மேலும் இச்சம்பவத்தை காதல் ஜோடி எரித்து ஆணவ கொலை என கூறி வதந்தி பரப்பிய நபர் யார் என சங்கரன்கோவில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button