செய்திகள்

அரசு மகளிர் விடுதியில் பராமரிப்பு இல்லாததால் கொடிய விஷ தேனீக்கள் கட்டியிருந்த கூடு, தீயணைப்பு படையினர் அகற்றினர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கழுகுமலை சாலையில் அமைந்துள்ள அரசு சீர் மரபினர் மகளிர் விடுதி கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஓராண்டிற்கு மேலாக பூட்டிய நிலையில் உள்ளது. இதனால் போதிய பராமரிப்பு குறைபாடால் விடுதியின் முதல் தளத்தில் கொடிய விஷ தேனீக்கள் கூடுகட்டி இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்கவும், மாணவ மாணவியர் விடுதிகள் தயார் நிலையில் வைத்திருக்கவும் மேலும் அதற்கான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் இன்று பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக வருகைபுரிந்த பணியாளர்கள் மேலே இருந்த தேன் கூடுகளை கண்டு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீப்பந்தங்கள் வைத்து கொடிய விஷம் கொண்ட தேனீக்களை அங்கு இருந்து அப்புறப்படுத்தினர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button