தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மலையன்குளம் பகுதியிலுள்ள ஆயக்கலந்தை கண்மாயில் கழுத்து அறுக்கப்பட்டும், தலை மற்றும் உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இது குறித்து அப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற நபர்கள் குருவிகுளம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குருவிகுளம் காவல்துறையினர் கொடூர கொலைக்கு ஆளானவர் யார். யாரால் கொலை செய்யப்பட்டார், அவர்களின் விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கரன்கோவில் பகுதிகளில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
செய்திகள் : குமரன், சங்கரன்கோவில்
8870633452
Visual @ FTP : 06.07.2021 Sankarankovil Unknown Dead Body