தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உமையதலைவன்பட்டியை சேர்ந்தவர் அந்தோணிராஜ். அவரது மகள் அருகில் இருக்கும் திருவேங்கடத்துக்கு பேருந்து மூலமாக பயிற்சிப் பள்ளிக்குச் செல்லும்போது அதே பகுதியைச் சேர்ந்த அய்யனார், மற்றும் அவரது சகோதரர்கள் பின் தொடர்ந்து வந்து தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது வீட்டில் தெரியபடுத்தியுள்ளார். இதனால் அந்தோணி ராஜ் அவரது மகள் பயிற்சி பள்ளிக்கு செல்லும் போது பேருந்து நிறுத்தம் வரை சென்று பேருந்தில் ஏற்றிவிட்டு, மீண்டும் வீட்டிற்கு வருகையில் தானே சென்று அழைத்துச் வருவது வழக்கம். சம்பவத்தன்று மகளை பின்தொடர்ந்து வருவதை தட்டிக்கேட்ட தந்தை மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் ரத்தக் காயங்களுடன் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார். முதலில் மருத்துவமனைக்குச் செல்ல போலீசார் அவரை அனுப்பி வைத்துள்ளனர். புகாரை வாங்காததால் வேதனையுடன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். பயிற்சி பள்ளிக்கு சென்ற மகளுக்கு பாதுகாப்புக்கு சென்றவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குமரன், சங்கரன்கோவில்
8870633452
Visual @ FTP : 06.07.2021 Sankarankovil Girl Harassment