தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையன்குளம் பகுதியில் கண்மாயில் கழுத்து அறுக்கப்பட்டும், தலை மற்றும் உடல் முழுவதும் வெட்டு காயங்களுடனும் ஆண் சடலம் கிடந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் கொடூர கொலைக்கு ஆளானவர் யார். யாரால் கொலை செய்யப்பட்டார், அவர்களின் விவரம் பற்றி விசாரணை நடத்தி வந்தனர். அவ்விசாரணையில் இறந்த நபரின் பெயர் செந்தில் என்பதும் அருப்புகோட்டை பகுதியில் நகை தொழில் செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது, கடந்த திங்கள் கிழமை காலையில் சங்கரன்கோவிலை சேர்ந்த ஒரு நபர் தங்க நகைகள் வைத்திருப்பதாகவும் அதை பெற்று கொண்டு பணம் கேட்டதாக கூறி சங்கரன்கோவிலுக்கு தனது காரில் 3 லட்சம் பணத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில் அவரது செல்போன் தொடர்பு துண்டிக்கப்பட்டு அவரை தொடர்பு கொள்ள முடியாமல் அவரை தேடி உறவினர்கள் சங்கரன்கோவில் வந்தனர். மேலும் அவரது செல்போன் மற்றும் அவர் கொண்டு வந்த பணம் 3 லட்ச ரூபாய் காணாமல் போனதும் தெரிய வந்துள்ளது. இதனால் அவர் 3 லட்ச ரூபாய் பணத்திற்காக கடத்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் குருவிகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் பகுதிகளில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Read Next
June 8, 2024
பாபநாசம் வனத்துறை செக்போஸ்டில் போலீசாரை கன்னத்தில் பளார் என அறைந்த வனத்துறை அதிகாரி….
June 7, 2024
இந்தியாவின் முன்னணி காட்டுயிர் ஆய்வாளர் முனைவர் ஏ.ஜே.டி. ஜான்சிங் காலமானார் .
June 7, 2024
திருச்சி விமான நிலையத்தில் ரூ 43 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கம் பறிமுதல், ஒருவர் கைது
June 7, 2024
கலவர பூமியான பத்திர பதிவு அலுவலகம் -ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக வாக்குவதம் , கைகலப்பு
June 6, 2024
கஞ்சா கடத்தி வந்த லாரியுடன் கடத்தி வந்த நபர்களும் கைது
June 6, 2024
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு
June 6, 2024
சுற்றுலா பயணிகளை கவர புதிய யுக்தியை கையாண்ட விடுதி மேலாளர் உட்பட 4 பேர் கைது
June 5, 2024
நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களை அமிலம் ஊற்றி பட்டு போக செய்தது யார்?
June 4, 2024
2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் – இந்திய தேர்தல் ஆணைய வலைதள பக்கத்தின் நேரலை
June 3, 2024
யானை தந்தங்கள் , யானை பற்கள் பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது – மேலும் சிலரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்
Related Articles
பழிக்கு பழி : பசுபதி பாண்டியன் கொலையில் தொடர்பு. பெண் வெட்டிப்படுகொலை – 5 பேர் சரண்!
September 25, 2021
பாலித்தீன் கழிவுகளை உண்ணும் மான்கள்
May 4, 2024
Check Also
Close
-
கள்ள தொடர்பு புது மாப்பிள்ளை வெட்டி கொலை..February 1, 2021