செய்திகள்

கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளைக்கு முதல்வர் முக ஸ்டாலின் இன்று வருகை  

தமிழக முதல்வராக பொறுப்பேற்று முதல் முறையாக கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளை இல்லத்திற்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இன்று வருகை புரிந்தார். முதல்வருக்கு கொளப்பாடு பகுதியில் நாகை மாவட்ட திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து திருக்குவளை வருகை புரிந்த முக.ஸ்டாலின் அங்குள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் குடும்பத்தோடு தரிசனம் செய்தார். 

அதனை தொடர்ந்து ஆலயத்தில் இருந்து நடந்தே கலைஞர் பிறந்த இல்லத்திற்கு வருகைதந்த முதல்வர், அங்கு இருந்த அஞ்சுகம் அம்மையார், முத்துவேலர், முரசொலிமாறன், டாக்டர் கலைஞர் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து கலைஞர் பிறந்த இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள பழைமையான புகைப்பட தொகுப்புகளை பார்வையிட்டார். பின்னர் தனியார் திருமண அரங்கில் பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக்கொண்ட முதல்வர் திருக்குவளையில் இருந்து புறப்பட்டார். அதனை தொடர்ந்து நாகை மாவட்டம் சீராவட்டம் பகுதியில் வெண்ணாற்றில்

2.5 கிலோ மீட்டர் தொலைவில் 3.6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார். முதல்வரின் வருகையையொட்டி திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், நாகை உள்ளிட்ட 3 மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில், 3 ஏடிஎஸ்பிக்கள், 8 டிஎஸ்பிக்கள், 20 இன்ஸ்பெக்டர்கள், 70 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 700 போலீசார், 200 ஊர்க்காவல் படையினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி,  ஆகியோரும், நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழக டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதிஸ்டாலின், ஆளூர்.ஷாநவாஸ்,  நாகை மாலி,  ஆகியோர் பங்கேற்றனர்.

செய்திகள் : ச.ராஜேஷ், நாகை

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button