கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடந்தனர். தற்போது அரசு சில தளர்வுகள் அளிக்கப்பட்டதால் மக்கள் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளனர்.
சமூகத்தில் மக்கள் நிம்மதியாக வாழ போலீசாரின் பங்கு அளவிட முடியாத ஒன்று
தென்காசியில் மாலை வேளைகளில் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது. தங்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடம் ஒதுக்கபடாத காரணத்தால் இடம் தேடி கோவிலை சுற்றி சுற்றி வலம் வர வேண்டிதாகியுள்ளது.
அதை புண்ணியமாக எடுத்து கொண்டாலும் பல வேளைகளில் போக்குவரத்தை சரி செய்கிறோம் என்ற பெயரில் சட்டம் ஒழுங்கு போலீசார் ஒரு சிலர் மிக கேவலமாக பொதுமக்களை ஒருமையில் பேசி திட்டுவது அருவெறுப்பை ஏற்படுத்தி போலீசாரின் மீதான மக்களின் நன்மதிப்பை இழக்க செய்கிறது.
சகிப்பு தன்மையும் பொருமையும் இல்லாத ஒரு சில போலீசாரால் மாவட்ட காவல்துறைக்கு அவ பெயர் ஏற்பட்டு வருகிறது.
காவல் துறையில் பணியாற்றும் பல திறமையான காவலர்கள் பொதுமக்களிடம் நெருங்கி பழகும் அதிகாரிகள் பலரும் குற்ற ஆவண காப்பகம் போன்ற பொதுமக்களின் தொடர்பில்லாத துறையில் இருக்கின்றனர்.
பொதுமக்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் இது போன்ற போலீசாரை மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்திற்க்கு மாற்றினால் சில காலம் மக்களின் தொடர்பில் இல்லாமல் பொது மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்,
பொதுமக்களும் பல நல்ல போலீசாரின் பணிகளை பாராட்டி கண்ணியபடுத்துவார்கள்…