நாகப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ஆனந்த் என்ற மீனவர் கடல் சீற்றம் காரணமாக கடலில் மூழ்கி மாயம் காணாமற்போன மீனவரை மீட்டுத்தருமாறு மத்திய-மாநில அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா நாயக்கர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் முத்து இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த இரண்டாம் தேதி இரவு நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆனந்து, முருகவேல் ,ரவி , செல்வகுமார் உள்ளிட்ட 11 மீனவர்கள் தொழிலுக்கு சென்றனர் இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி இரவு சென்னை 40 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது கடல் சீற்றம் காரணமாக படகிலிருந்து ஆனந்த் என்பவர் கடலுக்குள் தவறி விழுந்து விட்டார் காணாமல் போன மீனவரை இந்திய கடலோர காவல்படை மற்றும் மீனவர்கள் உதவியுடன் கடந்த நான்கு நாட்களாக தேடியும் காணாமல் போன மீனவரை கண்டுபிடிக்க முடியவில்லை இதனை அடுத்து தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் ஏமாற்றத்துடன் இன்று நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் வந்தடைந்தனர் இது தொடர்பாக நாகப்பட்டினம் கடலோர காவல்துறையில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் மாயமான ஆனந்திற்கு 14 மட்டும் பத்து வயதில் 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது மீனவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
செய்திகள் : ச.ராஜேஷ், நாகை மாவட்ட நிருபர்