தூத்துக்குடிமாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியில்
ஸ்ரீவைகுண்டம் தொகுதி திமுக தொழில்நுட்ப அணி அமைப்பாளர் வீட்டில் 89 பவுன் நகை மாயம். இச்சம்பவம் குறித்து ஆழ்வார்திருநகரி காவல்துறையினர் தீவிர விசாரணை
தூத்துக்குடிமாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே
ஆழ்வார்திருநகரி, வாய்க்கால் தெருவைச் சார்ந்த. ஒய்வு பெற்ற மின்சார ஊழியர் பெருமாள் இறந்துவிட்டார்.அவரின் மனைவி மாரியம்மாள் அவருக்கு 2 மகன்கள் மற்றும் 1மகளும் உள்ளனர் 2, மகன்கள் சென்னையிலும் மகள் திருமணமாகி பாளையங்கோட்டையிலும் உள்ளனர். மாரியம்மாள் மகன் ராகவன் ஸ்ரீவைகுண்டம் தொகுதி திமுக தொழில்நுட்ப அணி அமைப்பாளராக இருந்து வருகிறார்.மாரியம்மாள் அருகில் உள்ள நிலத்தில் மகளுக்கு புதிய வீடு கட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்லுவதற்காக நகைகளை அணிவதற்காக பீரோவில் வைக்கப்பட்ட இருந்த நகைகளை பார்த்த போது வைக்கப்பட்டிருந்த 89 பவுண் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் பின்னர் ஆழ்வார்திருநகரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததுள்ளார். ஆழ்வார்திருநகரி காவல்நிலைய ஆய்வாளர் ஜீடி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் இன்னோஸ் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது சம்பந்தமாக விரைந்து வந்து திருவைகுண்டம் டி.எஸ்.பி வெங்கடேஷ் விசாரணை நடத்தி திருட்டு சம்பந்தமான குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளார்.