தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஜமீன் இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலை குமார். இவர் நேற்று அருகே உள்ள தோட்டத்தில் நண்பர்களுடன் கறி விருந்தில் கலந்து கொண்டார். ஆனால் இரவு வீடு திரும்பாததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார். உடற்கூறு ஆய்வு முடிந்தபின்பு, உறவினர்களிடம் ஒப்படைக்க அழைத்தபோது, இறப்புக்கு உரிய காரணங்கள் தெரியாமல் நாங்கள் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. திருமலை குமாரின் நண்பர்கள் சந்திரன், முருகன், மணி மூவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமலை குமாரின் உறவினர்கள் இச்சம்பவத்தை கொலை வழக்காக மாற்றவும் இறப்புக்கு உண்டான காரணம் தெளிவுபடுத்தவும் கோரிக்கை விடுத்து சுமார் ஒரு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பானது.
Read Next
June 8, 2024
பாபநாசம் வனத்துறை செக்போஸ்டில் போலீசாரை கன்னத்தில் பளார் என அறைந்த வனத்துறை அதிகாரி….
June 7, 2024
இந்தியாவின் முன்னணி காட்டுயிர் ஆய்வாளர் முனைவர் ஏ.ஜே.டி. ஜான்சிங் காலமானார் .
June 7, 2024
திருச்சி விமான நிலையத்தில் ரூ 43 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கம் பறிமுதல், ஒருவர் கைது
June 7, 2024
கலவர பூமியான பத்திர பதிவு அலுவலகம் -ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக வாக்குவதம் , கைகலப்பு
June 6, 2024
கஞ்சா கடத்தி வந்த லாரியுடன் கடத்தி வந்த நபர்களும் கைது
June 6, 2024
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு
June 6, 2024
சுற்றுலா பயணிகளை கவர புதிய யுக்தியை கையாண்ட விடுதி மேலாளர் உட்பட 4 பேர் கைது
June 5, 2024
நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களை அமிலம் ஊற்றி பட்டு போக செய்தது யார்?
June 4, 2024
2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் – இந்திய தேர்தல் ஆணைய வலைதள பக்கத்தின் நேரலை
June 3, 2024
யானை தந்தங்கள் , யானை பற்கள் பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது – மேலும் சிலரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்
Related Articles
Check Also
Close
-
கடைக்கு முன்பு தூங்கிய காவலாளி கொலை : 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!!October 21, 2021