சென்னையில் உள்ள சாலைகள், பாலங்கள், தெருக்கள் மற்றும் பேருந்து நிறுத்தம் நிழற்குடைகள், தெருக்களின் பெயர் பொறித்த பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தால் உடனே புகார் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி . இதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளார்.
பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தால், அதுகுறித்த தகவல்களை மாநகராட்சியின் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகாராகத் தெரிவிக்கலாம். பொதுமக்கள் மாநகராட்சியின் இந்த நடவடிக்கைகளுக்குத் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கி சென்னை மாநகரைச் சுத்தமாகவும், அழகாகவும் பராமரிக்கும் வகையில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என, ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்”. இவ்வாறு சென்னை மாநகராட்சி தனது செய்தி குறிப்பில் கூறியுள்ளது