தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த கவாத்து பயிற்சியில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுடலைமுத்து அவர்கள் தலைமையில் காவலர்கள் அணிவகுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.*
அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கினார். பின் ஆயுதப்படை காவலர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை விரைவில் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில் காவல்துறையினராகிய நாம் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும், நாம் எல்லோரும் நல்லொழுக்கத்தை (Discipline) கடைபிடிக்க வேண்டும் என்றார்.*
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 2017ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்தவர்கள் அனைவரும் தாலுகா காவலர்களாக நியமிக்கப்பட்டு பல்வேறு காவல் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சென்ற வருடத்தில் மட்டும் ஒரு முறை 140 காவலர்களும், மற்றொரு முறை 130 காவலர்களும் தாலுகா காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப சுமார் 50 ஆயுதப்படை காவலர் விரைவில் தாலுகா காவலர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்தார்.*
இதில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கண்ணபிரான், காவல் ஆய்வாளர் திரு. சுடலைமுத்து, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.