செய்திகள்

நிலமோசடி பிரிவின் உதவியுடன் நிலம் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது

தென்காசி மாவட்டத்தில் நிலம் சம்பந்தப்பட்ட குற்றங்களான இடப் பிரச்சினை, நிலம் அபகரிப்பு, நிலமோசடி, பத்திரம் மோசடி போன்ற குற்றங்களை விசாரணை செய்வதற்காக தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு* இயங்கி வருகிறது. இந்நிலையில் ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குத்தபாஞ்சான் கிராமத்தில் வசித்து வரும் செல்லத்துரை என்பவரின் மகன் டேவிட் என்பவர் செல்வி என்ற பெண்ணிடம் 2 1/2 சென்ட் நிலம் வாங்கியுள்ளார், பின்பு நிலம் வாங்கிய சில மாதத்தில் அதே நிலத்தை வேறு ஒரு நபருக்கும் செல்வி விற்பனை செய்துள்ளார் என தெரியவந்தது. இதுகுறித்து டேவிட் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் நில ஆக்கிரமிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் புகார் அளித்ததையடுத்து, *துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. ஆரோக்கியராஜ் அவர்கள்* தலைமையில் *காவல் ஆய்வாளர் திருமதி. சந்திசெல்வி* விசாரணை மேற்கொண்டதில் செல்வி என்ற பெண் அவருக்கு சொந்தமான இடத்தை இரண்டு நபர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.பின்பு அந்த இடத்தை மீட்டு *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்கள்* முன்னிலையில் பாதிக்கப்பட்ட டேவிட் என்ற நபரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button