க்ரைம்செய்திகள்

தூத்துக்குடி அருகே சட்டவிரோதமாக மதுவிற்பனை – 17 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 17 பேர் கைது – 260 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு இருச்சக்கர வாகனம் பறிமுதல்.*

*♻ தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டை, திருச்செந்தூர் கோவில், செய்துங்கநல்லூர், ஓட்டப்பிடாரம், கயத்தார், குளத்தூர், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய 8 காவல் நிலைய போலீசார் நேற்று (10.07.2021) ரோந்து சென்ற போது சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 17 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 260 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு இருச்சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.*

*♻ இது குறித்து சம்மந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.*

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button