உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மோசடி செய்து வென்றதாக புகார் எழுந்ததை அடுத்த பாஜக- சமாஜ்வாதி கட்சியினரிடையே பயங்கர வன்முறை சம்பவம் நிகழ்ந்தது. இதில் 7 பேர் காயமடைந்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 476 உள்ளாட்சிகளுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று மாலை நடந்து முடிந்தன. இதில் பாஜக அமோக வெற்றி பெற்றது
இந்த நிலையில் பாஜக மோசடி செய்து தேர்தலில் வெற்றி பெற்றதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஹமீர்பூர் மாவட்டத்தில் சமாஜ்வாதி கட்சியினரை பாஜகவினர் தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு சமாஜ்வாதி கட்சியினர் வருவதை பாஜகவினர் வன்முறை மூலம் தடுத்து நிறுத்தியதாகவும் அகிலேஷ் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் சம்பவம் ஏற்பட்டது. கல்வீசி தாக்கிக் கொண்டனர். இதையடுத்து 17 மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து கலவரக்காரர்களை போலீஸார் கட்டுப்படுத்த முயற்சித்தனர்.
ஆனால் பலனில்லை. இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த வன்முறையில் 7 பேர் காயமடைந்தனர்