தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஊரடங்கை முன்னிட்டு மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டிதேவன்பட்டி சேனைத்தலைவர் மண்டபத்தில் வைத்து சுற்றுவட்டாரப் பகுதிகளான செங்கோட்டை மற்றும் இராமச்சந்திரபுரம் கிராமத்தைச் சேரந்த தூய்மை பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் இன்று (11.07.2021) அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு மற்றும் தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திமரப்பட்டி எம்.ஜி.ஆர் சிலை அருகே மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் என 200 பேருக்கு (11.07.2021) இன்று அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். அதே போன்று மூக்கை நன்றாக மூடி முகக்கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு உரையாற்றினார்.
முத்தையாபுரத்தில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முத்துமாலை, தனிப்பிரிவு காவலர் திரு. முருகன் உட்பட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.
மேலும் மாசார்பட்டியில் மாசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கோகிலா, உதவி ஆய்வாளர் திரு. மணிமாறன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பட்டிதேவன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திரு. முத்துராஜ், செங்கோட்டை செங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. மகேஸ்வரி, இராமச்சந்திரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. சீதாலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.*