கொரோனா பரவலின் இரண்டாம் அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. தற்போது தொற்று பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனையடுத்து தமிழகம், புதுச்சேரி இடையிலான போக்குவரத்தை இன்று முதல் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கடலூர் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புதுவை மாநிலத்திற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று காலையில் இருந்து தனியார் பேருந்துகளும் புதுவை வழியாக சென்னை செல்லக்கூடிய பேருந்துகளிலும் புதுவைத் செல்லக் கூடிய ஏராளமான மக்கள் பேருந்தில் முக்கவசம் அணிந்து பயணத்தை தொடங்கினர்.
கடந்த சில வாரங்களாக தமிழக பகுதியில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வந்த நிலையில் தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் புதுவை மாநிலத்தில் நேற்று வரை அரசு பேருந்துகள் இயங்கவில்லை இதனால் தமிழக பகுதியில் இருந்து புதுவை மாநிலம் வழியாக செல்லக்கூடிய தமிழகப் பேருந்துகள் விழுப்புரம் வழியாக சென்ற நிலையில் இன்று முதல் புதுவை மாநிலத்திற்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால் சென்னை செல்லக்கூடிய பேருந்துகள் புதுவை மாநிலம் வழியாக செல்கிறது.
இதனிடையே, புதுச்சேரி-தமிழகத்திற்கிடையே பேருந்து போக்குவரத்திற்கு அனுமதிக்க தமிழக போக்குவரத்துத்துறைக்கு புதுச்சேரி அரசு கடிதம் எழுதியுள்ளது, தமிழக அரசு அனுமதித்தால் ஒப்பந்தப்படி புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு 150 பேருந்துகளும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு 600 பேருந்துகளும் இயங்கும் என போக்குவரத்து துறை தகவல் தந்துள்ளது..