க்ரைம்செய்திகள்

திருச்செந்தூரில் 110 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது

திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 15 லட்சம் மதிப்புள்ள 110 கிலோ கஞ்சா மற்றும் 2 வாகனங்கள் பறிமுதல் – 4 பேர் கைது – எதிரிகளை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.
திருச்செந்தூர் பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களின் உத்தரவின்பேரில் திருச்செந்தூர் (பொறுப்பு) காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பாலாஜி அவர்கள் மேற்பார்வையில் திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் திரு. ஞானசேகரன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சுந்தரம், தலைமை காவலர்கள் திரு. ராஜ்குமார், திரு. இசக்கியப்பன் மற்றும் திரு. சொர்ணராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று (13.07.2021) அடைக்காலபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 2 கார்களை சோதனை செய்ததில், அந்த வாகனங்களில் இருந்தவர்களை விசாரித்தபோது, அவர்கள் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த முஸ்தாபா மகன் ஆசீர் (22), கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஹாய்சன் மகன் ஹஸ்வின் (24), கன்னூர் தலைசேரி பகுதியை சேர்ந்த அப்துல் லத்தீப் மகன் உம்னாஷ் (29) மற்றும் ஆந்திரா மாநிலம் விசாகபட்டிணம் கொலுகண்டா பகுதியை சேர்ந்த தாதபாபு மகன் சாய்கணேஷ் (23) என தெரியவந்தது, அவர்கள் மேற்படி கார்களில் 4 மூட்டைகளில் சட்டவிரோதமாக 110 கிலோ கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் 4 எதிரிகளையும் கைது செய்து, அவர்கள் கடத்தி வந்த சுமார் 15 லட்சம் மதிப்புள்ள 110 கிலோ கஞ்சா மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
மேற்படி எதிரிகளை கைது செய்து, 110 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.
இந்த ஆண்டு இதுவரை கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் சம்மந்தப்பட்டதாக 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 223 பேர் கைது செய்யப்பட்டு 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் சம்மந்தப்பட்ட 8 பேர் உட்பட 93 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போன்று தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 763 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 773 பேர் கைது செய்யப்பட்டு 72000 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் எச்சரித்துள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button