தூத்துக்குடியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்களிடம் 8.5 பவுன் தங்கச் செயின்களை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி குறிஞ்சி நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மனைவி சாந்தி ரேவதி (68). இவர் மாலை நேற்று குறுக்குச் சாலை சென்று விட்டு டவுண் பஸ்சில் தூத்துக்குடி வந்தார். பஸ் ஸ்டாப்பில் இறங்கியது அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலிச் செயின் மாயமாகி இருந்தது. பேருந்தில் யாரேனும் மர்ம ஆசாமி அதை திருடியிருக்கலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து அவர் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி அருகேயுள்ள பொட்டலூரணி, தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆத்திமுத்து. ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவி காந்திமதி (52). நேற்று மாலை செக்காரக்குடியில் இருந்து பொட்டலூரணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 2.5 பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துவீரப்பன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்