தமிழகத்தில் நாளை அல்லது நாளை மறுநாள் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் வெளியாக வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பிளஸ் 2 மதிப்பெண் வழங்கும் முறை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பின் படி,
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்களில் 50 சதவிகித மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும்.
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத்து முறையில் பெற்ற 20 சதவிகித மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும்.
12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு மற்றும் அக மதிப்பீட்டில் இருந்து 30% மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நாளை அல்லது நாளை மறுநாள் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் வெளியாக வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வுத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட நிலையில், மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவு பெற்றதால் முன்கூட்டியே பிளஸ் 2 மதிப்பெண்ணை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜூலை 31-ஆம் தேதிக்குள் பிளஸ் 2 மதிப்பெண் விபரம் வெளியிடப்படும் என கூறப்பட்ட நிலையில் முன்கூட்டியே வெளியிட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.