கடையநல்லூரை சேர்ந்த ஷாகீர் உசேன் வயது 31 தகப்பனார் பெயர் அகமதுல்லா ஆலன் மூப்பன் தெருவை சேர்ந்தவர் இவர் கத்தார் நாட்டில் AC மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊர் வந்த அவர் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்றார் குளிக்க சென்ற அவர் நிலை தடுமாறி ஆபத்தான பகுதிக்கு சென்று விட்டார் நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் நீரில் மூழ்கியவரை காப்பாற்ற முடியவில்லை அவர்கள் இதுகுறித்து தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் மூழ்கியவரை தேடினர் சில நேரம் தேடுதலுக்கு பிறகு ஆற்றில் மூழ்கியவர் பிணமாக கிடைத்தார்.உடலை கைப்பற்றிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர்:பாஸித்,கடையநல்லூர்