தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே குலையநேரி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஏழு கிராமங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய ஊர் குலையநேரி.. இங்கே பொதுமக்கள் மருத்துவத்திற்கு
செல்ல வேண்டுமென்றால் சேர்ந்த மரத்திற்கும் மற்றும் சுரண்டை அரசு மருத்துவமனை தான் செல்ல முடியும் அகவே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் குலயநெறி ஊர் மக்கள் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் பகுதிக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என்று மனு செய்தனர் அப்பொழுது உங்கள் ஊரில் அரசு சார்ந்த இடம் இல்லை என்பதால் மக்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பிறகு டி ஜெயராஜ் நாடார் அவர்கள் குலையநேரி ஊரைச் சார்ந்தவர் பொது மக்களுக்காக மருத்துவமனை கட்டுவதற்கு ஒரு ஏக்கர் மற்றும் சாலையிலிருந்து பாதையை சொந்தமாக அரசுக்கு நன்கொடை செய்தார். பிறகு மூன்று ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் தற்போது அடிப்படை வசதி இல்லாமல் காட்சியளிக்கிறது. முக்கியமாக குலையநேரி. அம்மையப்பப
புரம்.
திரிகூடபதி. சுப்பையாபுரம்
பூ பாண்டியபுரம் இரட்டை குளம் துரைச்சாமிபுரம். இவ்வூர் மக்கள் அனைவரும் வந்து செல்வதற்கு ஏற்ற பகுதியாக டி ஜெயராஜ் நாடார் அவர்கள் மருத்துவமனை கட்டுவதற்கு இடமளித்தார்.அரசு விரைவாக மருத்துவமனையை கட்டியுள்ளது இரவுபகலாக சிகிச்சை நடைபெற்று வருகிறது பொதுமக்களுக்கு ஆனால் சாலையில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் பகுதி வரை மண் சாலையாக காட்சியளிக்கிறது இரவு நேரங்களில் மின் விளக்குகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது தற்போது சுறுசுறுப்புடன் செயல்படும் தமிழக அரசு மக்களுடைய கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும் வணிகப் பெருமக்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்
செய்தியாளர் : வீரமணி, குற்றாலம்