க்ரைம்செய்திகள்

தூத்துக்குடியில் கொலை, கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – எஸ்.பி.ஜெயக்குமார் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்ட எதிரிகள் 3 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை.

முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழபுத்தனேரி வடக்கு தெருவை சேர்ந்த சுடலை மகன் மாரியப்பன் (50) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பண்டாரம் மகன் மூக்கையா (எ) சண்முகநாதன் (54) என்பவருக்கும் முன்விரோதம் இருந்த வந்த நிலையில் கடந்த 15.06.2021 அன்று மூக்கையா (எ) சண்முகநாதன், அவரது மகன் முருகபெருமாள் (30), கீழபுத்தனேரி தெற்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் பாலமுருகன் (21) மற்றும் இவர்களது உறவினர்கள் ஆகியோர் சேர்ந்து மாரியப்பனை அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மூக்கையா (எ) சண்முகநாதன் அவரது மகன் முருகபெருமாள், பாலமுருகன் மற்றும் அவரது உறவினர்களை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் முக்கிய எதிரிகளான முருகபெருமாள், பாலமுருகன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாஸ்கரன் அவர்களும்,*

தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதா நகர் பகுதியை சேர்ந்த பொய்யாமொழி மகன் ரவி (எ) பொன்பாண்டி என்பவரை முன்விரோதம் காரணமாக 18.06.2021 அன்று மாதா நகர் பகுதியில் வைத்து தருவைகுளம் நவமணி தெருவை சேர்ந்த தங்கபழம் மகன் அந்தோணி சதீஷ்குமார் (எ) சதீஷ் (41), சிலுவைப்பட்டி கணபதி நகரை சேர்ந்த சாமுவேல் மகன் ஜோதிராஜா (35) மற்றும் ஆத்தூர் தலைவன் வடலி பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம் மகன் மதன் (21), திருநெல்வேலி மாவட்டம் கட்டாம்புளி பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மகன் ஜெரீன் (23) மற்றும் இவர்களது நண்பர்கள் சேர்ந்து அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தோணி சதீஷ்குமார் (எ) சதீஷ், ஜோதிராஜா, மதன், ஜெரீன் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் ஏற்கனவே அந்தோணி சதீஷ்குமார் (எ) சதீஷ் மற்றும் ஜோதிராஜா ஆகியோர் 01.07.2021 அன்றும், மதன் என்பவர் 06.07.2021 அன்றும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேற்படி இவ்வழக்கின் மற்றொரு முக்கிய எதிரியான ஜெரீன் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஜெயந்தி அவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.*

மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில் ராஜ் இ.ஆ.ப அவர்கள் 1) கீழபுத்தனேரி வடக்கு தெருவை சேர்ந்த மூக்கையா (எ) சண்முகநாதன் மகன் முருகபெருமாள் 2) கீழபுத்தனேரி தெற்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் பாலமுருகன் 3) திருநெல்வேலி மாவட்டம் கட்டாம்புளி பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மகன் ஜெரீன் ஆகிய 3 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் எதிரிகள் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button