தென்காசி மாவட்டம்,சிவகிரி காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்த காவலர் தெய்வத்திரு. மாரிசாமி அவர்கள் சாலை விபத்தில் காலமானார். இந்நிலையில் இன்று (15.07.2021) அவரது சொந்த ஊரான சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நகரத்தில் அன்னாரது உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.. இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்கள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்..மேலும் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜாஹிர் உசேன்,காவல் ஆய்வாளர்கள் திரு. மீனாட்சி நாதன், திரு. மனோகரன் மற்றும் காவல் துறையினர் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்..
,செய்தியாளர் : வீரமணி, குற்றாலம்