தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் இலங்கை அகதிகள் முகாம் நிர்வாகிகள் தூத்துக்குடி குறிஞ்சி நகரில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் முகாம் அலுவலகத்தில் பாராளுமன்ற திமுக குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி நேரில் சந்தித்து தங்கள் முகாம்களில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி யும், இந்திய குடியுரிமை பற்றி தரக் கோரியும் மனுக்களை அளித்தனர் அதைத்தொடர்ந்து மனுக்களை பெற்றுக்கொண்ட கனிமொழி எம்பி அவர்களின் கோரிக்கையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி
தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு திமுக தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.
புதிய மீன்பிடி மசோதாவை எதிர்க்கிறோம் புதிய மீன்பிடி மசோதாவில் நிறைய பேருக்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கிறது
மத்திய அரசு புதிதாக ஒரு சட்டம் கொண்டு வரும் போது மாநில அரசின் உரிமைகளை தட்டிப் பறிக்கிறது
மத்திய அரசு மாநிலங்களுக்கான உரிமையை தரவேண்டும்
அனைத்தையும் நாங்கள்தான் முடிவு செய்வோம் என்று ஒன்றிய அரசு நினைக்கக்கூடாது.
மிக கடுமையான தண்டனைகள் எல்லாம் ஒன்றிய அரசு இந்த மசோதாவில் கொண்டு வந்துள்ளது. இதை எதிர்க்கிறோம். இது மீனவர்களை பழிவாங்கும் நிலைக்கு கொண்டுசெல்லுமே தவிர அவா்களுடைய பிரச்சனைக்கு தீர்வாகாது. என தெரிவித்தார்.