நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அழகப்பபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி மகன் செல்வராஜ் (61). இவரை நேற்று (14.07.2021) இவரது வீட்டின் முன்பு வைத்து பீக்கிலிபட்டி கிழக்கு காலனி தெருவைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் முத்துப்பாண்டி (21) என்பவர் முன்விரோதம் காரணமாக தவறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் நாலாட்டின்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சிலுவை அந்தோணி வழக்கு பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தார்.