சென்னை வணிகர் நல வாரியத்தில் சேர 3 மாதங்களுக்கு கட்டண விலக்கு அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதை பயன்படுத்தி ஏராளமான சிறு குறு வணிகர்கள் உறுப்பினராக சேர முடியும்.
வணிக வரித் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது : “வணிகர்களின் நலனுக்காக நாட்டிலேயே முதன்முதலாக ‘தமிழ்நாடு வணிகர் நலவாரியம்’ 1989-ல் தோற்றுவிக்கப்பட்டது.

தொடங்கி வைப்பு
இதன் மூலம் கடந்த மே 31-ம்தேதி வரை 8, 873 உறுப்பினர்களுக்கு ரூ.3 கோடியே 5 லட்சத்து 73 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. வணிகவரித் துறைஅமைச்சரால் கடந்த ஜூன் 16-ல்வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர இணையவழி சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வணிகர்கள் http://www.tn.gov.in/tntwp/tamil
என்ற இணைய சேவையைப் பயன்படுத்தி பதிவு செய்யலாம்.
கட்டணம் இல்லை
மேலும், வணிகர் நல வாரியத்தை சீரமைத்து, உறுப்பினர்சேர்க்கையை செம்மைப்படுத்தும் வகையிலும், வாரியத்தின் மூலம் நலத் திட்டங்களை செயல்படுத்த ஏதுவாகவும், சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தில் பதிவு பெற்று, விற்று முதல் அளவு ரூ.40 லட்சத்துக்கு உட்பட்ட சிறு வணிகர்கள், ஜிஎஸ்டி சட்டத்தின்கீழ் பதிவு பெறாத குறு வணிகர்கள் ஆகியோர் இந்த வாரியத்தில் உறுப் பினராக சேர, ரூ.500 சேர்க்கைக் கட்டணத்தை வசூலிப்பதில் இருந்து இன்று (ஜூலை 15) முதல் 3 மாதங்களுக்கு விலக்கு அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.