க்ரைம்செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 5 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

தென்காசி மாவட்டம், தொடர் கஞ்சா விற்பனை மற்றும் கொலை குற்றத்தில் சம்பந்தப்பட்ட 5 நபர்கள் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்கள்* அறிவுறுத்தலின் பேரில்,
தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்காசி S.K.P தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரின் மகன் முகமது அலி @ கஞ்சா அலி (31),கீழ பேட்டை பகுதியை சேர்ந்த பீர்முகமது என்பவரின் மகன் பாதுஷா (41) மற்றும் மங்கம்மாள் சாலை பகுதியைச் சேர்ந்த துரை என்பவரின் மகன் கார்த்திக் @ யமஹா கார்த்திக்(24) ஆகிய மூன்று நபர்கள் மீது தென்காசி *காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள்* குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டார்.
ஆய்க்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆய்க்குடி பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் பாண்டியராஜ் @ பாஸ்கர் இந்த நபர் மீது ஆய்க்குடி வட்ட *காவல் ஆய்வாளர் திருமதி. வேல்கனி அவர்கள்* குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டார்.
சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த முகமது கோதரி என்பவரின் மகன் முகம்மது மைதீன் என்ற நபர் மீது புளியங்குடி *காவல் ஆய்வாளர் திரு. ராஜாராம் அவர்கள்* குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டார்.
ஒரே நாளில் 5 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட காவல் ஆய்வாளர்களுக்கு பொதுமக்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button