செய்திகள்

நாகப்பட்டினம் அருகே சைபர் குற்றங்கள் பற்றி விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்

இன்று(17.07.21) நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வருகை புரிந்த திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. பாலகிருஷ்ணன். இகாப. அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு . கு. ஜவஹர்.இகாப. ஆகியோரது தலைமையில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர் கள்,தனிப் பிரிவு ஆய்வாளர், மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர், மேலும் 1.நாகப்பட்டினம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் காவல்துறை மற்றும் கிராம உறுப்பினர்கள் இணைந்து சைபர் கிளப் தொடங்கி வைத்து சைபர் குற்றங்கள் பற்றி விழிப்புணர்வு உரையாற்றினார். மேலும் 2. நாகூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெத்தி என்னும் கிராமத்தில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஏற்று உரையாற்றினார். *நேரடியாக குழந்தைகளிடம் தனக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தால் அதை பயப்படாமல் பெற்றோரிடம் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தி அவர்களுடைய நிறைகுறைகளை கேட்டறிந்தார்* . மேலும் 3. சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் சைபர் கிளப் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்

*மக்களின் பயன்பாட்டில் இணையப்பயன்பாடு  அத்தியாவசியமானதாக மாறியிருக்கிறது.  இணையவழி வகுப்புகள் முதல் மருத்துவம், வணிகம், வங்கி சேவைகள் உள்ளிட்ட அனைத்துமே இணையவழியில் நடைபெறுகிறது.” இதைப் பயன்படுத்தி இணையவழியில் மோசடி, போலி விளம்பரங்கள் மூலம் தரமற்ற பொருள்களை விற்பனை செய்தல், பண மோசடி, இணையவழி சூதாட்டம், பாலியல் தொல்லைகள் போன்ற சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.இதிலிருந்து பொதுமக்கள்தங்களை தற்காத்துக்கொள்ள போதிய விழிப்புணர்வு  அவசியமாக  உள்ளது. இதற்காக காவல்துறை சார்பில் பல்வேறு வகையில் விழிப்புணர்வு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு  வருகிறது*

என தெரிவித்தார். 4. வெளிப்பாளையம் காவல் நிலைய சரகம் எல்லைக்குட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இதில் *பெண்களிடம் நேரடியாக தங்களது குறைகளை கேட்டறிந்து உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்* .5 நாகூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாமந்தன் பேட்டை மீனவ கிராமத்தில் கடலோர கிராம விழிப்புணர்வு குழு கூட்டம் நடைபெற்றது இதில் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார்கள்.6. நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குடும்ப விழா கொண்டாட்டம் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு பெண்களுக்கு குத்துவிளக்கும் சிறுவர்களுக்கு விளையாட்டு பொருட்களும் வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் நாகூர் காவல் நிலையம், வேளாங்கண்ணி காவல் நிலையம், மற்றும் நாகப்பட்டினம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றினை நேரில் பார்வையிட்டு ஆய்வினை மேற்கொண்டார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button