சென்னை பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை சேம்பர்ஸ் காலனியில் அரிசி கடை நடத்தும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் வயது 45 என்பவரை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்தறுத்து வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது உடனடியாக குரோம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் அங்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை செய்து வருகிறார்கள்
முதல்கட்ட விசாரணையில் அரிசி வியாபாரம் செய்து கொண்டே பணம் வட்டிக்கு விட்டு வருவதும் அப்பகுதி இளைஞர்களிடம் செல்போன் வாங்கிக்கொண்டு பணம் கொடுப்பதுமாக இருந்து உள்ளார்.
இதனால் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது
மேலும் சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்தில் கொலைக் குற்றவாளிகளை வளைத்து பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள் விசாரணையில் சுண்டு சதீஷ்(23) மற்றும் பன்னி (எ) ரஞ்சித், விரியன் (எ) விஜயகுமார் மற்றும் ஒருவர் என தெரியவருகிறது
இதில் சுண்டு சதீஷ்,பன்னி ரஞ்சித் ஆகிய இருவரையும் சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.
மேற்கொண்டு கொலைக்கான காரணங்களை விசாரணை செய்து வருகின்றனர்.