செய்திகள்

தூத்துக்குடி அருகே டர்னிங்பாயிண்ட் அறக்கட்டளை சார்பாக ஏழை, எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கல்

தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளியில் டர்னிங்பாயின்ட் அறக்கட்டளை சார்பாக கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு 70 ஏழை, எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி நாராயணசுவாமி கோவிலில் கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு 70 ஏழை, எளிய மக்களுக்கு டர்னிங்பாயின்ட் அறக்கட்டளை சார்பாக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகள் வழங்க இன்று (19.07.2021) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை வழங்கினார்.
அப்போது அவர்கள் பேசுகையில், கொரோனா பெருந்தொற்று 3ம் கட்ட பரவல் காரணமாக 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூக்கை நன்றாக மூடி முகக்கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், இவை அனைத்தையும் நாம் கடைபிடித்து நாமே நம்மை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு உரையாற்றினார்.
இதற்கான ஏற்பாடுகளை டர்னிங்பாயின்ட் அறக்கட்டளையின் மேலாளர் திரு. மொரார்ஜி தேசாய் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு. ரமேஷ், உதவி ஆய்வாளர் திரு. பாண்டியன் உட்பட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button