பெரியநாயக்கன்பாளையம் அருகே, சந்தன மரம் வெட்ட முயன்ற நால்வர் பிடிபட்டனர் – வனத்துறை நடவடிக்கை:
பெரியநாயக்கன்பாளையம் அருகில், கூ.கவுண்டம்பாளையம் – கட்டாஞ்சிமலை இடையே 19.7.2021 இரவு முதல் தொடர் ரோந்துப் பணியில், பெரியநாயக்கன்பாளையம் பிரிவு வனவர் தாமஸ் தலைமையில், வனக்காப்பாளர்கள் திரு மோகன்ராஜ், தினேஷ் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 20.7.2021 முன் நள்ளிரவு 1.00AM மணியளவில், நாய்க்கன்பாளையம் வடக்கு சுற்று, தடாகம் காப்புக் காட்டின் எல்லையில் வெளிச்சம் நகர்வதைக் கண்காணித்தனர். அதைத் தொடர்ந்து, தோலம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனச்சரக அலுவலர் திரு செல்வராஜ் தலைமையிலான குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது தலைமையில் வனவர்கள் திரு முத்து, திரு மதுசூதனன், திரு கல்யாணசுந்தரம், வனக் காப்பாளர்கள் சதீஷ் மற்றும் உமாசங்கரன் ஆகியோர்கள் கொண்ட குழுவினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று, இரு தனிக்குழுவினரும், வெளிச்சம் வந்த பகுதி அடைந்து சுற்றி வளைத்தனர். அங்கே நான்கு நபர்கள் வனப்பகுதியை ஒட்டிய பட்டா நிலத்தில், சந்தன மரம் வெட்ட முயற்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களை ப் பிடித்து, அவர்கள் வைத்திருந்த ரம்பம், வெட்டுக்கத்தி ஆகியனவற்றை கைப்பற்றினர். அங்கிருந்த சந்தன மரம் ஒரு சிறிய காயத்துடன் வெட்டப்படுவது தடுக்கப்பட்டது. அவர்களை விசாரணை செய்ததில், அவர்களின் விபரம் பின்வருமாறு:
A1) ஜாலி ஜேக்கப் (55),
S/o. ஜேக்கப்,
மனந்தவடி,
வயநாடு மாவட்டம்,
கேரளா.
A2) மொய்தீன் (44),
S/o. முகமது (44),
பழைய அலுமினா மருத்துவமனை எதிரில்,
நயட்டுபாரை பூங்கா,
மன்னார்காடு தாலுகா,
பாலக்காடு மாவட்டம்,
கேரளா.
A3) ஜெகதீஷ் (54),
S/o.R.G.கோபால்,
43, நாகலம்மன் நகர்,
நரசிம்மநாயக்கன்பாளையம்,
கோவை.
A4) ராஜேந்திரன் (36)
S/o. ரவி,
சுண்டபட்டி,
அத்திகடவு,
மேட்டுப்பாளையம்.
பிடிபட்ட நான்கு எதிரிகள் மீதும், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோவை மாவட்ட வன அலுவலர் அவர்களது உத்தரவின்பேரில், எதிரிகளுக்கு தலா ரூ 10,000/- வீதம், மொத்தம் ரூ 40,000/- இணக்கக் கட்டணம் விதிக்கப்பட்டது.