தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம் மற்றும் நகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோவில் ஆடித்தபசு விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் அனுமதியின்றி பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது.மேற்படி நிகழ்ச்சிகளை பொதுமக்கள் காணும் வகைக்கு YouTube மற்றும் தொலைக்காட்சி வாயிலாக நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோவிலில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு ஜூலை 23ம் தேதி பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.மண்டகப்படி பூஜை நேரத்தின் பொழுது மட்டும் அன்றைய தினத்திற்குரிய மண்டகப்படிதாரர்கள் அடையாள சீட்டுடன் அனுமதிக்கப்படுவர். பொதுமக்கள் வசதிக்காக, ஜூலை 23ம் தேதி மேற்படி பூஜை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் YouTube வாயிலாக நேரலையாக (Live Telecast) காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எனவே, பொதுமக்கள் கோவிலுக்கு வருகை புரிவதை தவிர்த்து முழு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேல்கண்டவாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர ராஜ் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்