சென்னை குரோம்பேட்டை நாகல்கேனி ரெட்டைமலை சீனிவாசன் தெருவில் வியாபாரி ஆனந்தராஜ் குடும்பத்துடன் வசித்து வந்தார்.அவரது வீட்டில் பக்கத்து தெருவில் ஶ்ரீ கிருஷ்ணா ரைஸ் டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசி கடை நடத்தி வந்தார்.சம்பவத்தன்று சில சமூக விரோதிகள் மாமுல் கேட்டு பிரச்சனை செய்து ஆனந்தராஜை கடை வாசலிலே வெட்டி கொலை செய்துள்ளார்.
இது சம்பந்தமாக நாள் 21.07.2021 அன்று நண்பகல் 1 மணியளவில் கொலை செய்யப்பட்ட ஆனந்தராஜ் வீட்டில் அவரது மனைவியிடம் நேரில் துக்கம் விசாரிக்க சென்றேன். அப்போது என்ன நடந்தது ? ஏன் இப்படி செய்தார்கள்? என்று கேட்டபோது சில சமூகவிரோதிகள் அடிக்கடி கடைக்கு சென்று மாமுல் கேட்டு தொந்தரவு செய்வதாக கூறி வந்தனர்.
சம்பவம் நடந்த அன்றும் அதே சமூக விரோதிகள் மீண்டும் மாமுல் கேட்டு மிரட்டியுள்ளார்கள் அவர்களது மிரட்டலுக்கு பணியாததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அவரை கடையை விட்டு வெளியே இழுத்து போட்டு வெட்டி கொலை செய்துள்ளார்கள்.
ஆனால் கொலையாளிகள் தாங்கள் செய்த குற்றத்தை நியாயப்படுத்துவதற்காக என் கணவர் மீது அபாண்டமான பொய் குற்றச்சாட்டை கூறுவதாக அறிகிறேன் என்று வேதனையோடு கண்ணீர் மல்க கூறினார்.ஆதலால், இந்த வழக்கில் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஐயா அவர்கள் தலையிட்டு உண்மைக்குற்றத்தை அறிந்து, உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையை வழங்கும்படியும் கொலை செய்யப்பட்ட ஆனந்தராஜ் குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிடவும் வேண்டுகிறோம்.
சென்னை மாநகரில் போதைப்பொருள்களுக்கு அடிமையான இளைஞர்கள், ரவுடிகள் என்ற போர்வையில் வியாபாரிகளிடம் மாமுல் கேட்டு மிரட்டி கொலை வெறித்தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எழுதியாவது..