திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கருவூல காலனி, ஏபிபி நகர், லக்கயன் கோட்டை, நல்லாக் கவுண்டர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் இரவுநேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து நகை, பணம் உள்ளிட்டவை கொள்ளை போனது, மேலும் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு ஒட்டன்சத்திரம் போலீசார் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி சோமசுந்தரம் தலைமையில் ஆய்வாளர் வெங்கடாசலபதி மற்றும் சார்பு ஆய்வாளர் கணேசன்,சரவணன் உள்ளிட்ட குற்றப்பிரிவு போலீசாரின் உதவியுடன் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்,
இந்த நிலையில் நேற்று லக்கயன்கோட்டை பைபாஸ் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவரது மகன் தங்கராஜ் என்பவரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார் சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து வந்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஒட்டன்சத்திரம் உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் அவர் மீது தமிழகம் முழுவதும் சுமார் 30க்கும் மேற்பட்ட கொலை மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது இந்த நிலையில் தங்கராஜை கைது செய்த
போலீசார் அவரிடம் இருந்த சுமார் 16 லட்சம் மதிப்புள்ள 40 பவுன் தங்க நகைகளை மீட்டனர், மேடம் குற்ற செயல்களுக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.