செய்திகள்

தனிநபர் கைப்பற்றிய பஞ்சமி நிலங்களை மீட்கக்கோரிக்கை- தலித் விடுதலை இயக்கம் கலெக்டரிடம் மனு.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலித் விடுதலை இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் திண்டுக்கல் மாவட்டத்தில் 3204 ஏக்கர் 90 சென்ட் பஞ்சமி நிலங்கள் உள்ளன. கடந்த 1892 ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு நிபந்தனை பேரில் நிறமில்லாத குடும்பங்களுக்கு சுமார் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 1704 ஏக்கர் 90 சென்ட் பஞ்சமி நிலம் வழங்கப்பட்டுள்ளது. நிலங்கள் அனைத்தும் நிபந்தனை விதிமுறைகளின்படி தலித் அல்லாத பிற சாதியினர் ஆக்கிரமித்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு மீண்டும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா கரியாம்பட்டி கிராமம், ஓடைப்பட்டி கிராமம், சவ்வாது பட்டி, பழனி வட்டம் வாகரை கிராமம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரிய பயனாளிகளுக்கு அல்லது அதே சமூகத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கிட வேண்டும். இதேபோல் அனைத்து பூமிதான நிலைகளிலும் உள்ள தனிநபர் ஆக்கிரமிப்பு குறித்து நடவடிக்கை எடுத்து நிலங்கள் மீட்கப்பட்டு உரிய பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. தலித் விடுதலை இயக்க மாநில பொதுச் செயலாளர் கருப்பையா தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் கலந்துகொண்டு மனு கொடுத்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button