செய்திகள்

மாமனார் கொடுமையால் ரயிலில் தற்கொலைக்கு முயற்சித்த வாலிபர் – பொதுமக்கள் மீட்பு

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கரிசல்பட்டி சேர்ந்த பாலமுருகன் வயது 27 இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கள்ளிக்குடியை சேர்ந்த சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் ஜாபர் ராஜா முகமது என்பவரது மகள் சஹானா (பெயர்மாற்றம்) வயது 23 இவர் ஏற்கனவே திருமணமானவர் முன்னாள் கனவருடன் 4 ஆண்டு வாழ்ந்துள்ள்தாக கூறபடுகிறது. கணவரை விவாகரத்து செய்யாமல் பாலமுருகன் என்பவரை திருமணம் செய்துள்ளார் இந்நிலையில் பாலமுருகனை ராஜா முகமது தனது வீட்டில் மாடு ஆடு மேய்க்க வற்புறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனமுடைந்த பாலமுருகன் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தூக்க மாத்திரையை அருந்தி தற்கொலை முயற்சி செய்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் நேற்று ராஜாமுகமது அவரது மகன் ரியாஸ் ஜாபர் ரிஸ்வான் நான்கு பேரும் பாலமுருகனை கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் பயந்து பாலமுருகன் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறி நேற்று காலை கன்னியாகுமரியிலிருந்து மதுரை நோக்கி சென்ற மும்பை எக்ஸ்பிரஸ் முன்பு பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் பாலமுருகனை மீட்டு திருமங்கலம் நகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர் .இச்சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் போலிசார் மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை செய்து மிரட்டல் விடுத்த நபர்கள் மீது புகார் செய்ய அறிவுறுத்தல் கூறி திருமங்கலம் நகர் சார்பு ஆய்வாளர் மாரிகண்ணன் மற்றும் திருமங்கலம் ரயில்வே போலீசார் பாலமுருகனுக்கு தற்கொலை பற்றிய விழிப்புணர்வு அறிவுரைகள் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தற்கொலை என்னத்தை மற்றி வாழவழி அறிவுரை செய்த திருமங்கலம் மாரிகண்ணன் சார்பு ஆய்வளர்க்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவிததனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button