அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் கருணாநிதி. இவர் வழக்கறிஞர் பணி செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலெட்சுமி இவரும் வழக்கறிஞருக்கு படித்துள்ளார். . இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது முதல் மகள் கயல்விழி இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி நர்சிங் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் படித்து வருகிறார்.
இவரது இரண்டாவது மகள் கனிமொழி 17.
இவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பில் 469 பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.
நாமக்கல் கீரீன் கார்டனில் 12 ஆம் வகுப்பில் 562.28 மதிப்பெண் பெற்று
93 சதவீதம் முடித்த நிலையில்.
தற்போது கடந்த 12 ஆம் தேதி தஞ்சாவூரில் தாமரை பப்ளிக் பள்ளியில் நீட் தேர்வை எழுதியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முழுவதும் தந்தையுடன் இருந்த மாணவி மன அழுத்தம் காரணமாக இருந்துள்ளார்.
மாலையில் அரியலூர் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுள்ள தனது மனைவியை அழைத்துவர கருணாநிதி சென்றுள்ளார். இரவு 8 மணி அளவில் வீட்டை திறக்கும் பொழுது கதவு திறக்கப்படவில்லை உறங்கி விட்டாரோ என்று நினைத்து மீண்டும் மீண்டும் கதவை தட்டி பார்த்துள்ளனர். பின்னர் ஜன்னல் வழியாக பார்த்தபோது தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார் கனிமொழி இதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து பொற்றோருக்கு தெரிய வர சொந்த ஊரான சாத்தம்பாடி கிராமத்தில் உள்ள வீட்டிற்க்கு மாணவியின் பிரேதத்தை எடுத்து சென்றுள்ளனர். நீட் தேர்வினால் தொடர் தற்கொலைகள் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.