தமிழகத்தில் மழைக்காலம் ஆரம்பமாகி உள்ள நிலையில் மரத்தில் பல அதிசயங்கள் நடந்து வருகிறது. கடந்த நாள்களுக்கு முன்பு மதுரையில் வாகை மரத்தில் தண்ணீர் குடகுடமாய் கொட்டியது. இந்நிலையில் தென்காசியில் இதுபோன்ற ஒரு அதிசயம் நடந்துள்ளது.
தென்காசியில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் பிரதான சாலையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாவல், மருதம், புளியமரம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மரங்கள் சாலையின் இருபுறம் அமைந்துள்ளது. தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை பகுதியில் சாலையின் ஓரத்தில் உள்ள பழமையான நாவல் மரத்தில் இருந்து கடந்த 2 நாட்களாக தண்ணீர் கொட்டுகிறது. இதனை அப்பகுதியில் உள்ளவர்களும், வாகன ஓட்டிகளும் ஆச்சர்யத்துடன் கண்டு புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழை நீரானது மரத்தின் இடையில் உள்ள பள்ளத்தில் நீர் தேங்கி இருந்து வெளியேறலாம் என்று கூறப்படுகிறது.