செய்திகள்

மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் சமையல் வீடியோ பார்த்து கொண்டிருந்த பெண் அதிகாரி வைரல் வீடியோ!

கடலூரில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் சமையல் வீடியோ பார்த்துக் கொண்டிருந்த பெண் அதிகாரியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

கொரோனா பரவல் காரணமாக சில மாதங்களாக ஒத்திவைக்கப்பட்டிருந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் பொதுமக்கள் நேரடியாக ஆட்சியரை சந்தித்து மனுக்களை கொடுத்தனர் .

அப்போது ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி சுமதி , தனது செல்போனில் சமையல் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்திருந்தார் . இதை சிலர் கவனித்துவிட்டு அவர் யூடியூப் பார்ப்பதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டனர்.

கொஞ்சமும் பொறுப்பில்லாமல் இப்படி நடந்துகொள்ளும் அதிகாரியை அம்பலப்படுத்த வேண்டும் என்று அவர்கள் வீடியோவை வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரலானது.

அதனைத் தொடர்ந்து வீடியோவை பார்க்கும் பொதுமக்கள் அனைவரும் அந்த அதிகாரியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

#visilmedia #todaynewstamil #topnews #news #kadaloor #food #செய்திகள் #கடலூர் #சமையல்குறிப்பு # மக்கள்குறைதீர்ப்புகூட்டம் #தமிழ்நாடு

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button