மத்திய பிரதேசத்தில் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள நானாஜி தேஷ்முக் கால்நடை அறிவியல் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இரண்டு மாதங்களாக ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தனர்.
இதன் முடிவில், பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கான சாக்லேட்டை தயாரித்துள்ளனர்.
இதுகுறித்து பல்கலையின் துணைவேந்தர் திவாரி கூறியதாவது: “மல்டி வைட்டமின் புரதச் சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த சாக்லேட்டை தீவனம் இல்லாத நேரங்களில் கால்நடைகளுக்கு வழங்கலாம். அல்லது, இதர தீவனங்களுடன் சேர்த்தும் கூட இதை வழங்கலாம்.
இந்த சாக்லேட்டுகளை உண்ணும் கால்நடைகள் அதிக பால் சுரக்கும்; இது, இனப்பெருக்க வளர்ச்சி மற்றும் கருத்தரித்தல் விகிதத்தையும் அதிகரிக்கச் செய்யும். மாநில கால்நடை பராமரிப்பு துறைக்கு உதவி வரும் எங்கள் பல்கலைக்கழகம் விரைவில் மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு இந்த சாக்லேட்டுகளை விநியோகிக்கும் பணிகள் துவங்கும்.
500 கிராம் எடையிலான ஒரு சாக்லேட் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த சாக்லேட்டுகளை விற்பனை செய்ய மாநில அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அரசிடமிருந்து ஒப்புதல் கிடைத்ததும் விரைவில் இந்த சாக்லேட் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்” என அவர் கூறினார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #இந்தியஆராய்ச்சியாளர்கள் #கால்நடை #சாக்லேட் #இனப்பெருக்கம் #IndianScientists #Chocolate