இனி ரேஷன் கடைகளில் பனைவெல்லமும்!! முதல்வரின் சிறப்பான திட்டம்..
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று(அக்.23) பல புதிய திட்டங்களைத் துவக்கி வைத்தார். அதன்படி, ரேஷன் கடைகளில் இனி பனை வெல்லம் விற்பனை செய்யப்படும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பனை வெல்லம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவக்கூடியது. மருத்துவக் குணங்கள் அதிகம் உள்ள பனை வெல்லம் இனி ரேஷன் கடைகளின் கிடைத்தால், அது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 100 கிராம், 250 கிராம், 500 கிராம், ஒரு கிலோ என்ற வகையில் பனை வெல்லம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைத்தறி ஆடைகளை ஊக்குவிக்கும் வகையில் தீபாவளிக்கு தமிழ்த்தறி பட்டுப்புடவையையும் முதல்வர் இன்று அறிமுகப்படுத்தினார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முதல் முறையாக நியாய விலை கடைகளில் கற்பகம் பிராண்ட் பனை வெல்லம் விற்பனை திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். மேலும், காதிகிராப்ட் பொருட்களை விற்பனை செய்யும் தளமான டி.என்.காதி என்ற செயலி ஒன்றையும் தொடங்கி வைத்தார். சுமார் ரூ.65 லட்சம் செலவில் சாயல்குடியில் அமைக்கப்பட்டுள்ள பனை பொருள் பயிற்சி மையத்தையும் முதல்வர் இன்று காணொலி மூலம் துவக்கி வைத்தார்.
இதற்கிடையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி, நவம்பர் மாதத்தில் 1 – 3 ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7 மணி அரை ரேஷன் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொது மக்களின் வசதிக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தமிழகஅரசு #தமிழ்நாடு #முகஸ்டாலின் #ரேஷன்பொருட்கள் #பனைவெல்லம்