தமிழ் புத்தகத்தில் தமிழன் எங்க போனான்!! 5ம் வகுப்பு புத்தகத்தில் கீழடி அகழாய்வு பற்றிய தகவல் இல்லை !!
ஐந்தாம் வகுப்பு 2ஆம் பருவ சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் கீழடியில் தமிழக தொல்லியல் துறை நடத்திய அகழாய்வு பற்றிய தகவல் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கீழடியில் நடைபெற்ற 7 கட்ட அகழாய்வுப் பணியில், முதல் 3 கட்ட அகழாய்வுகளை இந்திய தொல்லியல் துறையும், மற்ற நான்கு கட்ட அகழாய்வுகளை தமிழக தொல்லியல் துறையும் மேற்கொண்டன.
ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் பண்டைய அகழ்வாராய்ச்சி என்ற தலைப்பில் கீழடி பெருமை குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது. இதில், கீழடி கிராமத்தின் பெருமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
சங்க காலத்தை சேர்ந்த பழமையான நகரம் கீழடியில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதில் செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள், செம்மணிகள், வளையல்கள் உள்ளிட்டவை கிடைத்துள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் ரோம் நாட்டுக்கும் வணிக தொடர்பு இருந்ததாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்நிலையில் பாடப்புத்தக்கத்தில் இந்தியத் தொல்லியல் துறை ஆய்வு செய்தது தொடர்பான தகவல் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
தமிழக தொல்லியல் துறை நடத்திய அகழாய்வு குறித்த தகவல் இடம்பெறாதது ஏன் என்று தொல்லியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.இதனால் இந்த விவகாரம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
Source : NewsTM
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #கீழடி #தமிழ்நாடு #தமிழ்நாடுகல்வித்துறை #5ம்வகுப்புபுத்தகம் #சமூகஅறிவியல் #Archaeological #Keezhadi